காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2015ம் ஆண்டு புதிய கல்வியாண்டிற்கு மாணவர் அனுமதி


பழுலுல்லாஹ் பர்ஹான்-

லங்கையில் தென் மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்கான மேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவு, அல்குர்ஆன் மனனப் பிரிவு என்பவற்றின் முதலாம் ஆண்டிற்கு புதிதாக மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதாக காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவுக்கு 15 வயதிற்கிடைப்பட்ட தற்பொழுது பாடசாலையில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் அல்குர்ஆனைச் சரளமாக ஓதத் தெரிந்தவர்களும், அல்குர்ஆன் மனனப் பிரிவுக்கு 11-13 வயதிற்கிடைப்பட்ட அல்குர்ஆனைச் சரளமாக ஓதத் தெரிந்தவர்கள் 31-10-2014 திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் போது கட்டாயமாக விண்ணப்பதாரிகளின் முழுப் பெயர், வயது, கல்வித் தரம், சேரவிரும்பும் பகுதி விலாசம், தொடர்பு கொள்ள வசதியான தொலைபேசி இலக்கம் என்பன பற்றிய முழு விபரங்கள் அடங்கிய சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை

அதிபர்,
இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி, 
த. பெ. இல: 105, 
இல.50, ஹிரிம்புர குறுக்கு வீதி, 
காலி 
என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும்.

அல்லது தொ.பே.இல. : 0912243672 , 077 7921418 
இணையத்தளம் www. ibnuabbas.org
தொ.நகல் : 0912222037
 ஈமெயில்: ibnuabbas.galle@gmail.com
முகவரிக்கு தொடர்பு கொள்ள முடியும் எனவும் இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி) தெரிவித்தார்.

இங்கு மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்பக் கல்வி வழங்கப்படுவதுடன் மாணவர்கள் க. பொ. த. சா/த, உ/த. பரீட்சைகளுக்கும் தயார்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :