மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரஃப் அவர்களின் 14 ஆவது "நினைவேந்தல்"

பைஷல் இஸ்மாயில்-

ர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரஃப் அவர்களின் 14 ஆவது 'நினைவேந்தல்' நிகழ்வும், பாலமுனை கிராமத்தில் 14 கோடி ரூபா நிதியொதுக்கீட்டில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பதுடன், நிறைவு செய்யப்பட்ட அபிவிருத்திப் பணிகளை மக்களிடம் கையளித்து வைக்கும் நிகழ்வும் தேசிய காங்கிரஸின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வுகளில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன், மாகாண சபைகளின் உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள்,, அரச உயரதிகாரிகள் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இரு கட்டங்களாக இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுகளின் முதற்கட்டமாக பாலமுனை கிராமத்தில் நிறைவு செய்யப்பட்ட அசசயடி வீதி, ஊர்க்கரை வீதி, சின்னப் பாலமுனை காபட் வீதி, ஹூசைனியா நகர் முகப்பு வீதி, மற்றும் ஹிறா நகர் வீடமைப்புத் திட்டம், உதுமாபுற மின்சார திட்டம் மற்றும் ஹிறா நகர் மக்ளுக்கான வாழ்வாதார திட்டம் என்பன மக்களிடம் கையளித்து வைக்கப்படவுள்ளன.

மேலும் பனையடி விவசாயப்பாதை, வன்னிப்பத்து விவசாயப் பாதை, படாரக்கல் குளம் புனரமைப்பு, ஹிறாநகர் மின்சார திட்டம், மின்ஹாஜ் வித்தியாலய உள்ளக வீதி,அல்-ஹிதாயா வித்தியாலய உள்ளக வீதி என்பன அன்றய தினம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

இரண்டாம் கட்ட நிகழ்வாக மாலை பாலமுனை அல்-ஹிதாயா வித்தியாலய கூட்ட மண்டபத்தில் மறைந்த மாமனதர் கலாநிதி எம்.எச்.எம். அஸ்ரஃப் அவர்களது நினைவுவேந்தல் கூட்டம் இடம் பெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :