இந்தியா-
தரைத்தளத்தில் உள்ள அந்த அறை சபாநாயகரால் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் சுதீப் பந்தோபாத்யாயா மற்றும் சுல்தான் அகமது ஆகியோர் தெரிவித்தனர். ஆனால் 1999 ஆம் ஆண்டு முதல் இந்த அறை தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 15 ஆண்டுகளாக தாங்கள் பயன்படுத்தி வரும் இந்த அறையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் அக்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
இதனால் இரு கட்சி எம்.பி.க்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த பெயர் பலகையை திரிணாமுல் எம்.பி.க்கள் கழட்டி வீசி எறிந்தனர்.
இரு கட்சியினரும் தன்னை வந்து சந்திக்குமாறு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் சபாநாயகரை சந்தித்து தங்கள் தரப்பில் நடந்தவற்றை விவரித்தனர். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்தே கட்சிகளுக்கு அறை ஒதுக்கப்படுவதாக தெரிவித்த சபாநாயகர், 34 எம்.பி.க்களை கொண்ட நான்காவது பெரிய கட்சியான திரிணாமுல் கட்சிக்கு அந்த அறை ஒதுக்கப்பட்டதாக தெரிவித்ததையடுத்து சர்ச்சை முடிவுக்கு வந்தது. <மா.ம>

0 comments :
Post a Comment