பொத்துவில் பிரதேசத்துக்கு உப வலய கல்வி அலுவலகம் இன்று திறப்பு -படங்கள்


சலீம் றமீஸ், எம்.ஏ. தாஜகான்,பைஷல் இஸ்மாயில்-

ள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான  ஏ.எல்;;.எம்.அதாஉல்லாவின் தீர்க்கதரிசனமான அபிவிருத்தி வழிகாட்டலில் கிழக்கு மாகாண  அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மூவின  மக்களும் வாழ்ந்து வருகின்ற பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான உப –வலயக் கல்வி அலுவலகம் வைபவரீதியாக மிகவும் கோலகலமாக திறந்து வைக்கப்பட்டது.

பொத்துவில் பிரதேச மாணவர்களின் சிறந்த கல்வி நடவடிக்கைகள் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களும் நிருவாக ரீதியான இலகுவான செயல்பாடுகளையும் கருத்தில் கொண்டு கிழக்கு  மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பொத்துவில் தொகுதி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் ஏ.எம்.அப்துல் மஜீட் ஆகியோர்களின் முயற்சியின்  பலனாகவே இந்த உப – வலயக் கல்வி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவரும், பொத்துவில் தொகுதி  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான ஏ.எம்.அப்துல் மஜீட் அவர்களின்  தலைமையில் இடம்பெற்ற வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றான இந்த உப – வலயக் கல்வி  அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதிகளாக தேசிய காங்கிரஸின் தேசிய  தலைவரும்,உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு  மாகாண கல்வி, காணி, காணி அபிவிருத்தி, போக்குவரத்து மற்றும் கலாசார அமைச்சர் விமல  வீர திஸாநாயக்கா ஆகியோர் கலந்து கொண்டு காரியாலயத்தினை திறந்து வைத்தனர்.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும்  நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும்,மாகாண சபை  அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சுகாதார, சுதேச  வைத்திய துறை, சிறுவர் நன் நடத்தை பராமரிப்பு, சமூக சேவைகள், கூட்டுறவு அபிவிருத்தி, 
விளையாட்டுத்துறை , தொழிற்பயிற்சி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர்  கௌரவ அதிதிகளாகவும், சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான  எம்.எல்.ஏ.அமீர், ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின்  செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார, மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம்,  உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் பொத்துவில் பிரதேச இணைப்பாளரும், பிரதேச சபை உறுப்பனருமான ஏ.பதுர்க்கான், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாஸீத்,  அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காஸீம், பொத்துவில் உப – வலயக்   கல்விப் பணிப்பாளர் ஏ.அப்துல் அஸீஸ் உட்பட பாடசாலைகளின் அதிபர்கள், கல்விமான்கள்,  ஆசிரியர்கள் முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

உப கல்வி வலயம் திறந்து வைத்ததன் பின்னர் பொத்துவில் அல்- பஹ்ரியா வித்தியாலயத்தின்  தரம் 06 தொடக்கம் தரம் 11 வரையிலான புதிய வகுப்புக்களும் ஆரம்பித்து வைக்கப்பட்டது இந்த  நிகழ்வின் இன்னொரு விசேட அம்சமாகும். இதனைத் தொடர்ந்து அல்- பஹ்ரியா  வித்தியாலயத்தில் பொதுக் கூட்டமும் இடம் பெற்றது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :