ஹாசிப் யாஸீன்-
சாய்ந்தமருது பொதுவிளையாட்டு மைதான அபிவிருத்திற்கு திகாமடுல்ல மாவட்டபாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் 40 இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடுசெய்துள்ளார்.
இது சம்பந்தமாக ஆராயும் உயர்மட்டக் கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்டமண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில்இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எம்.எல்.சலீம், பாராளுமன்ற உறுப்பினரின்இணைப்பாளர் எம்.ஏ. ஹமீட், சாய்ந்தமருது விளையாட்டுக் கழக சம்மேளனத்தின் பிரதிநிதிகள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினர் அபிவிருத்திசெய்யப்படவுள்ள மைதானத்தை நேரில் சென்று பார்வையிட்டதுடன் வேலைகளை உடன்ஆரம்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுத்தந்தபாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்கும் இவ்வேலைத் திட்டங்களைதுரிதமாக மேற்கொண்டுவரும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீமுக்கும்சாய்ந்தமருது பிரதேச விளையாட்டுக் கழகங்கள், விளையாட்டு கழகங்களின் சம்மேளனம்மற்றும் இளைஞர்கள் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
_Copy1.jpg)
_Copy1.jpg)

0 comments :
Post a Comment