பாறூக் சிகான்-
கல்முனை நற்பிட்டிமுனை பிரதேசத்தில் உள்ள மஸ்ஜிதுல் ஸலாம் பள்ளிவாசலில் இடம்பெற்று வருகின்ற ஊழல்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டு கடந்த சில தினங்களிற்கு முன்னர் வேலி பயிரை மேய்வதா? என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரம் ஒன்று இஸ்லாமிய நலன்புரி அமைப்பு எனும் பெயரில் வெளியாகியுள்ளது.
அண்மைக்காலமாக குறித்த பள்ளிவாசலை பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாகம் அதன் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்வதாகவும் இதனை தொடர விட்டால் பள்ளிவாசலின் சொத்துக்கள் அழிந்து விடும் என்பதை வலியுறுத்தி இத்துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இத்துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
50 வருடங்களாக ஸலாம் பள்ளிவாசல் நிர்வாகம் சீராக இயங்கி வந்த நிலையில் தற்போது 2014 ஆண்டு பொறுப்பெடுத்த தற்போதைய அ.மதனி என்பவர் தலைமையிலான நிர்வாகம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் பள்ளிவாசல் நலனுக்கென ஒரு சாராரும்.அருகில் உள்ள மதரிஸாவின் நலனிற்கு மற்றுமொரு சாராரும் சில ஒப்பந்தங்களின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர்.
இதனிடையே தற்போது இரு சாராருக்கும் இடையே குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பியசேன அவர்களின் 150000 ருபா நிதியொதுக்கீடு தொடர்பாக
தற்போதைய தலைவரும்,பொருளாளர் அப்துல் மஜீத் ஹுசைர் என்பவரும் பள்ளிவாசல் மற்றும் மதிரிஸா நிர்வாகத்தை தாங்கள் நிர்வகிப்பதாக பாராளுமன்ற உறுப்பினருக்கு எடுத்து கூறி அவரை அங்கு அழைத்து வந்து நவீன மலசல கூடமொன்றினை அமைக்க அடிக்கல் நாட்டும் முயற்சி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு அரச ஊடகத்தில் இது குறித்து செய்தி ஒன்றும் வெளியாகி உள்ளது.
எனவே தான் இப்பள்ளிவாசலின் சொத்துக்களை சூறையாடும் இந்ந குள்ள நரிக்கூட்டம் தேவையா?இவர்கள் தானா பள்ளிவாசல் காவலர்கள் ? மக்கள் மௌனமாக இருக்காது அல்லாஹ்வின் மாளிகையையும் அதன் சொத்துக்களை பாதுகாத்து குறித்த நபர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என
அதில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
எது எவ்வாறாகினும் தன் பல்லைக்குத்தி பக்கத்து வீட்டானுக்கு முகரக்கொடுப்பது நல்லதல்ல,, ஹஜ் கோட்டா விடயம் போன்று இன்று பல குழுப்பிரச்சனை (சுய நலவாதப்பிரச்சனை) சமூகத்துக்கு சீர்கேடாகி விடுகிறது எனவே சிந்தனையுடன் செயற்படுங்கள்.
.jpg)
.jpg)

.jpg)
0 comments :
Post a Comment