ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-
ஏ.ஆர் செந்தூரனின் 'திரை விலகும் போது' நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று சனிக்கிழமை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்றது.
வரவேற்புரையை கொழும்பு தமிழ் சங்க தலைவர் இரகுபதி பாலஸ்ரீதரனும், வெளியீட்டுரையை சூரியன் எப்.எம்.பணிப்பாளர் ஏ.ஆர்.வி.லோஷனும் நூல் நயவுரையை ஆசிரியர் க.கலாகரன் மற்றும் சட்டத்தரணி சோ.தேவராஜா ஆகியோர்கள் ஆற்றயதுடன் ஏற்புரையையும் நன்றியுரையையும் நூலாசிரியர் ஏ.ஆர்.செந்தூரன் நிகழ்த்தினார்.
இதன்போது புரவலர் ஹாசிம் உமர் சிறப்புப் பிரதியை பெற்றுக் கொண்டார். பெருந்திரளானவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
+-+Copy.jpg)
+-+Copy.jpg)
+-+Copy.jpg)
0 comments :
Post a Comment