த.நவோஜ்-
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினால் வாழ்வின் எழுச்சி பயனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் திட்டமான வாழ்வாதார கருத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகம் தோறும் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இதனடிப்படையில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட நூற்றியொரு பயனாளிகளுக்கு மானிய அடிப்படையில் கோழிகளும், அதற்கான உணவு மற்றும் மருந்து வகைகளும் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி திணைக்கள காரியாலயத்தில் இடம்பெற்றது.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ரீ.தினேஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பயனாளிகளுக்கு கோழிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றன. ஒரு குடும்பத்துக்கு பத்தாயிரம் ரூபா பெறுமதியில் நூற்றியொரு குடும்பத்திற்கும் பத்து இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான கோழிகளும், அதற்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வாழ்வின் எழுச்சி திணைக்கள முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி.தேவமனோகரி பாஸ்கரன், வங்கி முகாமையாளர் திருமதி.கோ.லதா, கருத்திட்ட முகாமையாளர் திருமதி.எஸ்.தமிழ்வாணி, வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்கள் பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment