உணவிற்காக ஏங்கிய முதியவர்: குப்பை தொட்டியில் தள்ளிய வாலிபன் (வீடியோ இணைப்பு)


பெலாரஸ் நாட்டில் கல்லூரி மணவன் ஒருவர் ஆதரவற்ற முதியவர் ஒருவரை குப்பை தொட்டியில் உணவு தேடும் போது அவரை தள்ளி விட்டு துன்புறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெலாரஸின், பெரஸ்ட் நகரை சேர்ந்த ஆன்ரெஜ் டலராசெக் (21), மாணவன் ஆதரவற்ற முதியவர் ஒருவரை துன்புறுத்தி காணொளி எடுத்து வெளியிட்டுள்ளார்.

அதில், அந்த முதியவர் உணவுக்காக, குப்பை தொட்டியை பார்க்கும் போது, இவர், அந்த முதியவரை பின்னால் இருந்து குப்பை தொட்டிக்குள் தள்ளிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த முதியவர் அதிலிருந்து வெளியே வர பெரும் அவதிக்குட்பட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தினை, தனது நண்பர்களின் உதவியோடு காணொளி எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார், இதனைத் தொடர்ந்து மற்ற இரு இளைஞர்கள் அந்த முதியவரை காப்பாற்றியுள்ளனர்.

இந்த காணொளி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகு, பொலிசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி அந்த மாணவனை கைது செய்துள்ளனர். தற்போது அவனுக்கு 1600 பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காணொளியை எடுத்த இவரது நண்பருக்கு எந்தவித தண்டனையும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :