த.நவோஜ்-
மட்டக்களப்பு புளியந்தீவு கல்லடித்தெரு பொதுமக்களினால் முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீ தாந்தா முருகன் ஆலய உற்சவத்திற்கான புனித யாத்திரை நிகழ்வு வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு புளியந்தீவு ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியது.
இவ் யாத்திரையானது புதூர், வவுணதீவு, வாழைக்காலை பிரதேசம் வழியாக ஸ்ரீ தாந்தா முருகன் ஆலயத்தைச் சென்றடையவுள்ளது. பின்னர் புளியந்தீவு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்களில் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு யாத்திரைப் பயணம் தொடர்ந்து இடம்பெற்றது.
யாத்திரிகர்களுக்காக செல்லும் வழிகளில் இருக்கும் ஆலயங்களால் தண்ணீர்ப் பந்தல்கள் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பனிச்சையடி காளி கோயில் நிர்வாகத்தினரால் மதிய உணவும், பாவற்கொடிச்சேனை காளி கோயில் நிர்வாகத்தினரால் இரவு உணவும் வழங்கப்படவுள்ளது.
+-+Copy.jpg)
+-+Copy.jpg)
+-+Copy.jpg)
+-+Copy.jpg)
0 comments :
Post a Comment