ஆளும் கட்சியிலிருந்து விலகப் போவதில்லை- அமைச்சர் ஹக்கீம்

ளும் கட்சியிலிருந்து விலகப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் சில முரண்பாடுகள் நிலவி வருவதாகவும், சிலவற்றுக்கு அவசரமாக தீர்வு காண வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளும் கட்சியை விட்டு விலகினால், அசாத் சாலிக்கு நேர்ந்த கதியே தமக்கும் நேரிடும் எனவும், தேசிய அரசியல் நீரோட்டத்தை விட்டு விலகியிருக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சி ஆதரவாளர்கள் முன்னிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சி அங்கம் வகித்துக் கொண்டே அழுத்தம் கொடுக்க உத்தேசித்திருப்பதாகவும் உள்ளிருந்து அழுத்தம் கொடுக்கும் ஓர் தரப்பாக செயற்படப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் சமூகத்தினர் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தொடர்ந்தும் குரல் கொடுக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த நிலைப்பாடு குறித்து கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பேருவளை அலுத்கம சம்பவங்களுக்கு எதிர்ப்பு வெளியிட்டு கட்சி அரசாங்கத்தை விட்டு விலக வேண்டுமென கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதிக்கும் ஹக்கீமிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
GTN
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :