காயங்களை நானே ஏற்படுத்திக் கொண்டேன் என சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த போது தம்மை மாணவர்கள் தாக்கியதாக குறித்த மாணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர் சந்திரகுமார் சுதர்சன் என்ற மாணவரே இவ்வாறு முறைப்பாடு செய்திருந்தார்.
பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் போது சுயமாகவே காயங்களை ஏற்படுத்திக் கொண்டதாக மாணவர் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடரும் நோக்கில் இவ்வாறு தாம் நாடகமாடியதாக மாணவர் ஒப்புக்கொண்டுள்ளார். தாக்குதலை நடாத்த பயன்படுத்திய கம்பி பிளேட் மற்றும் கைகளைக் கட்டிக் கொள்ள பயன்படுத்திய வயர் போன்றன மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment