ஈராக்கில் தற்போதைய அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் இஸ்லாமியப் போராளிகளின் தாக்குதல்கள் தீவிரத்தை எதிர்கொள்ள சவுதி அரேபியாவும், எகிப்தும் ஒரு கூட்டு முயற்சியினை மேற்கொண்டன.
எகிப்தின் அதிபர் அப்தெல் பட்டா அல் சிசியும், சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாவும் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்திற்கு எதிரானவர்களாகக் கருதப்படுகின்றனர். ஈராக்கில் போராளிகளுக்கு கிடைத்துள்ள தற்போதைய வெற்றியை தங்களுடைய ஸ்திரத்தனமைக்கான அச்சுறுத்தலாகவும், பிராந்தியப் பாதுகாப்பு குறைபாடாகவும் அவர்கள் கருதுகின்றனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிறன்று இருவரும் சந்தித்துப் பேச்சுவாரத்தை நடத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றை நிராகரிக்கும் இஸ்லாமியத்தின் உண்மயான மற்றும் மிதமான மதிப்புகளை மேம்படுத்தும்விதமாக இணைந்து செயல்பட இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக சிசியின் தகவல் தொடர்பாளர் எஹாப் படவி குறிப்பிட்டார்.
ஈராக்கின் நிலைமை குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர் என்று அவர் கூறினார். அரபு முஸ்லிம் நாடுகளிடையே தற்போது காணப்படும் சூழ்நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுவதாக சவுதியின் வெளியுறவுத்துறை அமைச்சரான இளவரசர் சவுத் அல் பைசல் தெரிவித்தார்.
வெளிநாட்டு, உள்நாட்டு போர்கள், துரோகம் மற்றும் சர்ச்சைகள் தலையீடு போன்றவை அதிகரித்துக் காணப்படும் இந்த நேரத்தில் பகைமையை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகும் என்றும் அவர் கூறினார்.
0 comments :
Post a Comment