பலஸ்தீன் அப்பாவி பொது மக்களை கொன்றொழிக்கும் இஸ்ரேலுக்கு எதிராக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நாளை போராட்டம் நடத்தவுள்ள அதே இடத்தில் (கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பு) பொது பல சேனாவும் அவ் ஆர்பாட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு தயாராகிறது.
இது தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்தை தடுக்க இவர்கள் செய்யும் யுக்தியாகவே விளங்குகிறது. மேலும் அப்பாவி பொது மக்களை கொன்று தீவிரவாத தாக்குதல்களையும் நடாத்தி வரும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதென்பது மிருகத் தனமான ஒரு செயலே. தாங்களும் அது போன்ற காட்டு மிராண்டித் தனமானவ்ரகள் என்பதை மீண்டும் ஒரு முறை உலகுக்கு அம்பலப்படுத்தியுள்ளது பொது பல சேனா.
“நாளை நடாத்தவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு எத்தகைய தடை வந்தாலும் இன்ஷா அல்லாஹ் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் தவ்ஹீத் ஜமாத்தின் ஆர்ப்பாட்டம் நடைபெரும்” என தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைச் செயலாளர் ரஸ்மின் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
.jpg)
0 comments :
Post a Comment