உரியமுறையில் ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் சில நிறுவனங்கள் சிம் கார்ட்களை விநியோகிக்கின்றன. எனவே சில குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு இவை வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆகையால் இனிமேல் இவ்வாறு ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் சிம் கார்ட் விநியோகிப்போருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதாவது சிம்காட்கள் வாங்க வரும் ஒருவரிடம் தேசிய அடையாள அட்டை இல்லையெனில் சில சிம்கார்ட் நிறுவன பிரதிநிதிகள் ஏற்கனவே சிம்கார்ட் வாங்கிய ஒருவரது தேசிய அடையாள அட்டை பிரதியை பயன்படுத்தி சிம்கார்ட்களை பெற்றுக்கொள்கின்றனர். அவ்வாறான செயற்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதாவது இவ்வாறான செயற்பாடுகளுக்கு உடந்தையாக செயற்பட்டமை தொடர்பிலேயே அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் முறையாக ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் சிம்கார்ட்கள் விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

0 comments :
Post a Comment