அமீர் முஹமட்-
நடக்கவிருக்கின்ற ஊவா மாகாண சபை தேர்தலில், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வது சம்மந்தமாக அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்த முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்களிடமும் பிரதிநிதித்துவத்தை பெறுவதில் அக்கறையுள்ளவர்களிடமும் ஊவா மாகாண மக்கள் விடுத்த வேண்டுகோளின் பயனாகவும், உத்தியோகபற்றற்ற முறையில் கட்சிகள் பேசிக்கொண்டதன் காரணமாகவும், ஊவா மாகாண சபையில் முஸ்லிம்கள் ஓரணியில் போட்டியிடுவது தொடர்பான உயர்மட்ட சந்திப்பு ஒன்று தற்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களது இல்லத்தில் நடைபெறுவதாக எங்களது செய்திச்சேவைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இச்சந்திப்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களும், அமைச்சர் ரிசாத் பதுர்தீன் அவர்களும், முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் சுகைர் அவர்களும், சுறா கௌன்ஸிலின் தலைவர் தாரீக் முகம்மட் அவர்களும், கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

0 comments :
Post a Comment