பாறுக் சிகான்-
வன்னி காடுகளில் வனவிலங்கு கடத்தல் வலைப்பின்னல் ஒன்று செயற்படுவதாக விவசாய கமநலசேவைகள் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.
வட மாகாண விவசாய அமைச்சில் மீட்கப்பட்ட புலிக்குட்டிகளை உத்தியோகபூர்வமாக வனவிலங்கு திணைக்களத்திடம் கையளிக்கும் நிகழ்வில் இந்த கருத்தை முன்வைத்தார்.
அவர் மேலும் தனது கருத்தில்,
தற்போது காடுகளில் சிறுத்தை போன்ற விலங்கு வியாபாரங்கள் நடைபெறுகின்றன.இதற்கென ஒரு வலைப்பின்னல் உள்ளது.மீட்கப்பட்ட சிறுத்தைக்குட்டிகள் தொடர்பாக எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு கிடைத்தது.நான் அவ்விடம் நோக்கி சென்றிருந்தேன்.முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதி இதுவாகும்.எம்மை கண்டவர்கள் குறித்த இரு குட்டிகளையும் போட்டுவிட்டு நழுவிச்சென்று விட்டனர்.
இதனால் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.ஆனால் இக்காட்டு பிரதேசம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.இவ்விடயம் தொடர்பாக அவர்களிற்கு (இராணுவத்திற்கு)தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.
உடனடியாக இவ்விடயத்தை அனுராதபுரம்,கொழும்பு பிரதேசத்தில் உள்ள வனவிலங்கு திணைக்களத்திற்கு அறிவித்தேன்.இன்று அவர்கள் இதை பொறுப்பெடுத்துள்ளார்கள் என ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட புலிக்குட்டிகள் சிறந்த தேகாரோக்கியத்துடன் காணப்படுவதுடன் சுமார்2,3 வயது உடையது என தற்போது விவசாய அமைச்சில் இருந்து உத்தியோகபூர்வமாக புலிகளை பொறுப்பேற்ற அனுராத புர வனவிலங்கு திணைக்கள மிருக வைத்தியர் சந்தன ஜெயசிங்க தெரிவித்தார்.
மேலும் இப்புலியினம் இயற்கையை பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியம்(ஐஓசிஎம்) அருகி வரும் விலங்கினமாக அடையாளப்படுத்தியுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment