த.நவோஜ்-
நாட்டில் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினர் தங்களால் முடியுமான உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் பொலநறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அசேலபுர கிராம மக்களுக்கு இராணுவத்தின் 233வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மெலிபன் தனியார் நிறுவனத்தின் அனுசரனையில் நீர்தாங்கிகளும் உலர் உணவுப் பொருட்களும் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் 233வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி நந்த கத்துருசிங்க, 23வது படைப்பிரிவின் பொறுப்பதிகாரி கேர்ணல் அபேரத்தன, மெலிபன் தனியார் நிறுவனத்தின் சமூக வியாபார முகாமையாளர் லகுரு சரீத் மற்றும் மெலிபன் தனியார் நிறுவனத்தின் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
அசேலபுர கிராமத்தைச் சேர்ந்த 25 குடும்பங்களுக்கு நீர்த்தாங்கிகளும், ஐம்பது குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment