இங்கிலாந்தின் வெளியுறவு துறை துணை மந்திரி, உள்நாட்டில் வாழும் மாறுபட்ட சமுதாயங்கள் நலத்துறை மந்திரியாக பொறுப்பு வகிப்பவர், சயீதா வார்ஸி.
பாகிஸ்தானில் உள்ள குஜ்ஜார் கான் பகுதியை பூர்வீகமாக கொண்ட இவரது குடும்பம் 1960-களில் இங்கிலாந்துக்கு சென்று அங்கேயே குடியேறியது. தனது ஆரம்பக் கல்வி மற்றும் பட்டப்படிப்பினை இங்கிலாந்தில் பயின்ற சயீதா வர்ஸீ, இங்கிலாந்தின் பிரபல தொழிலதிபராகவும், வழக்கறிஞராகவும் உள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்தில் பிரபலமான சமூக சேவகியாக இவர் தொண்டாற்றி வந்துள்ளார்.
இங்கிலாந்தின் பழமைவாத கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அதில் இணைந்த இவருக்கு 2010-ம் ஆண்டு கேபினட் அந்தஸ்துடன் மந்திரி பதவி வழங்கப்பட்டது.
காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 1900 மக்கள் பலியாகியுள்ள நிலையில், காஸா விவகாரத்தில் இங்கிலாந்து அரசின் கொள்கையை தன்னால் தொடர்ந்து ஆதரிக்க முடியாததால் மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாகவும், தனது ராஜினாமா கடிதத்தை இன்று காலை பிரதமருக்கு அனுப்பி விட்டதாகவும் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் சயீதா வார்ஸி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அரசின் அமைச்சரவையில் மந்திரியாக இடம் பெற்ற இஸ்லாமிய மதத்தை சேர்ந்த முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment