காஷ்மீரில் இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் தாக்குதல்

காஷ்மீரில் இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. 

பூஞ்ச் மாவட்டம் ஷேக்பூரில் உள்ள இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இந்திய ராணுவமும் கடுமையான பதிலடி கொடுத்தது. இந்த ஆண்டு கடத்த மாதம் 16ம் தேதி வரை மட்டும் 54 முறை பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. 

மோடி அரசு பதவி ஏற்ற பின்னர் 19 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் டெல்லியில் பிரதமரை சந்தித்த தினத்தன்றே எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

 இதனிடையே ஆரஸ்புரா என்ற இடத்தில் பாதுகாப்பு படையினரின் கூட்டு நடவடிக்கையில் காலிஸ்தான் தீவிரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பாகிஸ்தான் சிம் கார்டுகள், தொலைபேசிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :