பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவின் புதல்வர் தொலைபேசி மூலம் தொடர்புகளை பேணி வருகிறார்

கொழும்பு வடக்கு பிராந்தியத்திற்கான முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தனவின் புதல்வர் ரவிந்து குணவர்தன தொலைபேசி மூலம் தொடர்புகளை பேணி வருவதாதக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பம்பலப்பிட்டியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் என்பவரை படுகொலை செய்ததாக, ரவிந்து மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், சிறையிலிருந்து கொண்டு ரவிந்து குணவர்தன, தொலைபேசி மூலம் சிலருடன் தொடர்பு கொண்டு உரையாடி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வடமத்திய மாகாணசபையின் உறுப்பினர் பியுமல் ஹேரத் என்பவருடன் அடிக்கடி ரவிந்து தொடர்பு கொண்டு உரையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்ட மா அதிபரினால் கொழும்பு உயர் நீதிமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட இரகசிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

தனது தாய் உள்ளிட்ட சிலருடன் அடிக்கடி சிறையிலிருந்து கொண்டே ரவிந்து தொடர்புகளைப் பேணியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சந்தேக நபர்களை மேலும் மூன்று மாத காலத்திற்கு தடுத்து வைக்குமாறு சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசுட்டர் ஜெனரல் ஆயிஸா ஜினசேன, நீதவானிடம் கோரியுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி முதல் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ரவிந்து சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். 6ம் திகதி இந்த வழக்கு விசாரணைகள் மீள நடைபெறும் எனவும் அதன் போது பிணை வழங்குது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :