காத்தான்குடி, காங்கேயனோடை, ரிஸ்வி நகர், போன்ற பிரதேசங்களில் விஜயத்தினை மேற்கொண்ட கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி , கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் மக்களின் குறைகளை கேட்டறிந்ததுடன் அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது குறித்தும் விரிவாக கலந்துரையாடினார்.
போரின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாழ்வாதார தேவைகளை கண்டறியும் வகையில் தமது அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட வருவதாக தெரிவித்த அமைச்சர் தொழிலற்று வாழும் இளைஞர். யுவதிகள் விடயம் குறித்தும் தாம் கவனம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். கிழக்கின் முதலீட்டு அரங்கத்தின் மூலம் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்காக பாரிய தொழில் முயற்சியை தாம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். வெளிநாட்டு உள்நாட்டு முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தில் பெருமளவு ஆர்வம் காட்டி வருவதாக கலந்தரையாடலின் போது அமைச்சர் தெரிவித்தார். மேலும் காத்தான்குடியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள், தொண்டர்கள், பொது மக்களையும் இவ்விஜயத்தின் போது சந்தித்தார்.
அமைச்சரின் ஊடகப்பிரிவு
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment