சர்வதேச உல்லாசத்துறை மேம்பாடு தொடர்பான சர்வதேச மாநாடு மூன்று தினங்களாக தம்புல்ல கந்தலமே ஹோட்டலில் இடம்பெற்றது. இம்மாநாட்டினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸநாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி , கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட், சப்பிரகமுவ பல்கலைக்கழக உபவேந்தர் உடவத்த, மற்றும் பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் , விரிவுரையாளர்கள், மற்றும் உல்லாசத்துறை நிபுணர்கள் மற்றும் அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, மலேசியா, தாய்லாந்து, சீனா, சிங்கப்பூர், பிரித்தானியா, அமெரிக்கா, கம்போடியா, என ஏறத்தாழ 20 நாடுகளைச் செர்ந்த 200க்கும் மேற்பட்ட பிரதி நிதிகள் கலந்து நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய உல்லாசப் பிரயாணிகளின், அபிவிருத்தி தொடர்பாக முக்கியமான தீர்மானங்கள், எடுக்கப்பட்டமை இம்மாநாட்டின் சிறப்பம்சமாகும்.
இம்மாநாட்டில் கலந்த கொண்ட பிரதிநிதிகள் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சின் அனுசரனையுடன் கிழக்கு மாகாணத்திற்கான சுற்றுலா ஒன்றையும் மேற்கொண்டனர். இவ் சுற்றுலாவின் போது கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையின் வளங்கள் தொடர்பான அறிவனைப் பெற்றுக் கொள்வதோடு கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான தகவல்களும் இம்மாநாட்டின் போது கலந்தாலோசிக்கப்பட்டது.
அமைச்சரின் ஊடகப்பிரிவு

_Copy1.jpg)
_Copy1.jpg)
.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment