கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் கூட்டம் 2014.08.08ம் திகதி கிழக்கு மாகாண முதலைமைச்சர் நஜிப் அப்துல் மஜீட் அவர்களின்
தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது கீழ் குறிப்பிடப்படும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவில் பிந்தங்கிய கிராமமான வான்எல பிரதேசத்தில் வாழும் மக்கள் வைத்திய சாலைக்கு செல்வதற்கு 27மஅ தூரம் செல்ல வேண்டி உள்ளது. இங்கு வாழும் மக்கள் விவசாயிகள் என்பதால் சென்று வருவதில் பல அசௌகரியங்கள் உள்ளதால் வான்எல பிரதேசத்தில் உள்ள ஆரம்ப சுகாதார பராமரிப்பு அலகினை பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்த அமைச்சரவையின் அங்கீகாரத்தை கோரி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை வான்எல மக்களின் நலன் கருதி ஆரம்ப சுகாதார பராமரிப்பு அலகினை பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமை புரிந்து வரும் திரு.கே.பத்மநாதன் எதிர்வரும் 2015.01.06 ஆம் திகதியில் தனது சேவையில் இருந்து இளைப்பாறவுள்ளார்.
• கிழக்கு மாகாண அபிவிருத்தி வேலைகளில் தேசிய கொள்கைக்கு அமைவாக செயல்பட்டு 12 வருடங்கள் தொடர்ச்சியாக சேவை புரிந்து வருவதுடன் எதிர் காலத்தில் கிழக்கு மாகாண அபிவிருத்தி பணிகளுக்கு இவர்கள் சேவை தேவைப்படுவதால் திரு.கே.பத்மநாதன் அவர்களை எதிர்வரும் 2015.01.07 ம் திகதியில் இருந்து கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் மீள் சேவை நியமன அடிப்படையில் பணிக்கு அமர்த்தி இவரின் சேவையினைப் பெற்றுக் கொள்ள கிழக்கு மாகாண சபையின் அனுமதியினைக் கோரி கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் நசீர் அகமட் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை திரு.கே.பத்மநாதன் அவர்களை கிழக்கு மாகாண விவசாய அமைச்சிள் மீள் நியமனம் வழங்கி கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் பதவிக்கு நியமனம் செய்வதற்கான சிபார்சினை அமைச்சரவை வழங்கியதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான உதுமாலெப்பை தெரிவித்தார்.
• கிழக்கு மாகாணத்தில் அண்மைக் காலமாக நிலவி வரும் கடும் வரட்சியின் காரணமாக மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள் எனவும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டுள்ள கிழக்கு மாகாண சபையால் இதுவரையும் எந்த விதமான நிவாரணங்களும் வழங்கப்படாமல் உள்ளதெனவும் எனவே, கிழக்கு மாகாண சபை வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு விசேட நிதியினை ஒதுக்க வேண்டும் என கிழக்கு மாகாண கல்வி,காணி,போக்குவரத்து அமைச்சர் திரு.விமல வீர திஸாநாயக்க அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை மத்திய அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்திற்கு 75 மில்லியன் ரூபாவும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 30 மில்லியன் ரூபாவும், திருகோணமலை மாவட்டத்திற்கு 52.5 மில்லியன் ரூபாவும் குடி நீர் வழங்குவதற்கு ஒதுக்கியுள்ளது.
இந்த நிலையில் கிழக்கு மாகாண சபை சார்பில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிதி ஒதுக்கப்பட வேண்டுமெனவும் முதல் கட்டமாக நீர் வழங்குவதற்காக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கு தலா 3 மில்லியன் ரூபா வீதம் 9 மில்லியன் வழங்குவதாகவும் மூன்று மாவட்டங்களில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர்கள் ஊடாக அடையாளம் காண்பதாகவும் தீர்மானிக்கப்பட்டதாக மேலும் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
_Copy1.jpg)
0 comments :
Post a Comment