தென் ஆபிரிக்க உப ஜனாதிபதியும்,சமரச பேச்சுவார்த்தை தொடர்பில் அண்மையில் இலங்கைக்கு வந்து சென்றவருமான சிரில் ராமபோஷாவுக்கு,அவர் தலைமை தாங்கிய அந்நாட்டு ஆணைக்குழுக் கூட்டமொன்றில் பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் வருடம் தென் ஆபிரிக்கவில் தோண்டப்பட்ட சுரங்கமொன்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்களில் 34 பேர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.அவ்வமயம் அச்சுரங்க நிறுவனத்தின் பணிப்பாளராகயிருந்த சிரில் ராமபோஷா இப்படுகொலைகளைக் கண்டும் காணாத போக்கில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
இந்நிலையில்,இப்படுகொலை தொடர்பிலான நேற்றைய ஆணக்குழுக் கூட்டத்துக்கு ராமபோஷா தலைமை தாங்கியபோதே கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment