பொத்துவில் கிராமத்தான் கலீபாவின் நழுவி கவிதை நூல் வெளியீடு

 அஸ்ரப் ஏ சமத்-

பொத்துவில் கிராமத்தான் கலீபாவின் “நழுவி” எனும் கவிதை நூல் நேற்று கொழும்பு  வை.எம்.எம்.ஏ யில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

நூற்றுக்கணக்கான இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வு தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக  பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசீத் கலந்து கொண்டார்.  நூலின் முதற்பிரதியை மீராலெப்பை முசம்மில் புரவலர் ஹாசீம் உமர் முன்ணிலையில் பெற்றுக்கொண்டார். 

பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் துறைமனோகரன், நாச்சியா  தீவு பர்வின், முஸ்டின், எஸ்.ஜனூஸ், கின்னியா அமீர் அலி, மணிப்புலவர் மருதூர். ஏ  மஜீத், கலைவாதி கலீல், எஸ்.எழில்வேந்தன் ஆகியோர்களும் உரைநிகழ்த்தினார்கள்.

கலீபா நவீன கவிதையிலிருந்து புது இரத்தம் பாய்ச்சும் இளம் கவி பேரிகையாக  மிளிர்கிறார். புதுக் கவிதைகள் மற்றுமன்றி மரபுக் கவிதைகளையும் நன்றாகவே எழுதும்  கலீபா தற்போது மேடை அச்சு, இலத்திரனியல் என்று முழங்கி வரும் பொத்துவில்  கார்மேகம் கிராமத்தானின் இந்த கன்னிக் கவிதைத் தொகுதிக்குப் பின்னரும் பல தொகுதிகளையும்  எதிர்ப்பார்ப்பதாகக் கலைவாதி கலீல் வாழ்த்தஐற வழங்கினார்.

பொத்துவில் பிரதேச சபைத் தலைவர் அப்துல் வாஜித் உரையாற்றுகையில் - இந்த வெளியீட்டு  விழாவை நாம் பொத்துவிலில் நடாத்தியிருந்தால் 30 பேர்க்கும் குறைவாகவே சமுகம்  தந்திருப்பார்கள். ஆனால் கடந்த ஆண்டு பொத்துவில் அஸ்மின் தனது புத்தக வெளியீட்டை  தனது தயாரையும் அழைத்து மிக சிறப்பாக மண்டபம் நிநை;த சனங்களுடன் வெகுவிமர்சையாக 
நடாத்தியிருந்தார். 

அதே போன்று தான் கிராமத்து கலிபாவின் நூல் வெளியீட்டில் இந்த  நாட்டில் மிகப் பிரபல்யமாண இலக்கியவாதிகள் கவிஞர்கள் மண்டபம் நிறைந்து கலிபாவை  கௌரவிப்பதையிட்டு நான் மிகவும பரிப்டைவதாகச் சொன்னார்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :