ஹாசிப் யாஸீன்-
கல்முனையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நவீன வதிகளுடன் கூடிய நீதிமன்ற கட்டிடத் தொகுதிற்கான இடத்தை ஒதுக்கீடு செய்வது தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கூட்டம் கல்முனை பிரதேச செயலகத்தில் நேற்று (14) இடம்பெற்றது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் மங்கள விக்ரம ஆராச்சி, கட்டிடங்கள் திணைக்கள நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எம்.சாகிர், கல்முனை நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் எம்.திலகராஜன், கல்முனை பிரதேச செயலக குடியிருப்பு உத்தியோகத்தர்களான ஏ.எச்.எம்.ஹிபாயதுல்லா, பீ.கோவிந்தசாமி உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமின் முயற்சியினால் நீதியமைச்சின் 500 மில்லியன் ரூபா செலவில் இந்நீதிமன்றக் கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இதன்போது தெரிவித்தார்.
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment