இலங்கை தொடர்பாக: திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம்- படங்கள்













லங்கை அரசின் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் இணையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பற்றி இழிவாக கட்டுரை வெளியானது அறிந்ததே.

முதல்வர் ஜெயலலிதாவை பற்றி இழிவாக கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசை கண்டித்தும், சென்னையில் உள்ள அந்நாட்டு துணை தூதரகத்தை மூடக்கோரியும் தமிழ் திரையுலகினர் நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்பு பந்தல் அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கலந்து கொண்டு நடிகர் விஜய் பேசுகையில், ”ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நம் மீனவர்களுடைய கஷ்டங்களை தீர்ப்பதற்காக நம்முடைய தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள், எவ்வளவோ ஸ்டெப்ஸ் எடுத்துக்கிட்டு இருக்காங்க.

அதை ஸ்ரீலங்கா கவர்மெண்ட் அவர்களுடைய டிஃபன்ஸ் ( பாதுகாப்புத் துறை) வெப்சைட்டில் கேலி செய்வது போன்ற ஒரு கமெண்ட் பண்ணியது உண்மையிலேயே என் தாயை தப்பாக பேசின மாதிரி நாங்க நினைக்கிறேன். இது ஒட்டுமொத்த தமிழருக்குமே ரொம்ப, ரொம்ப வருத்தத்துக்குரிய விஷயம். அதை கடுமையாக கண்டிக்கிறோம்” என்றார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :