கொழும்பு மருதானை டீன்ஸ் வீதியில் அரச சார்பற்ற அமைப்பொன்றினால் காணாமல் போனோரின் குடும்பங்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் உடனான கூட்டம் ஒன்றிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் சற்று முன் குறித்த கூட்டத்தை நிறுத்தக்கோரி தேரர்கள் குழுவென்று வழியுறுத்தி வருவதாகவும் பிரதேசத்தில் அசாதாரன நிலை தோன்றியுள்ளதாகவும் சகதோர இணையம் செய்தியாளர் தெரிவித்தார்.
அரச சார்பற்ற அமைப்பான சென்டெர் ஃபோர் சொசைடி எனும் அமைப்பு ஏற்பாடு செய்த குறித்த அமர்வுக்கு இடையூரு விளைவிக்கும் வகையில் இருபது பேர் கொண்ட தேரர் குழுவெறு நடந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சற்று முன் மருதானை பொலிஸார் ஸ்தலத்துக்கு வந்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.ம.நியூஸ்

0 comments :
Post a Comment