ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்வதற்கான இறுதி நாள் எதிர்வரும் ஆகஸ்ட் 06 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இம்முறை தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஊவா மாகாணத்தின் அனைத்து அரச அலுவலர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், தபால் மூல வாக்களிப்புக்கான தமது விண்ணப்பபடிவங்களை எதிர்வரும் 06 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் செயலகத்திற்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்குமாறு தேர்தல்கள் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வாக்கெடுப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்ட எந்தவொரு அரச ஊழியர்களும் எக்காரணம் கொண்டும் வாக்கெடுப்பு நிலையத்தை விட்டு வெளியே செல்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.
மேலும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு உரிமையுடைய பாதுகாப்புப்படை அங்கத்தவர்கள், பொலிஸ் அலுவலர்கள், மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையில், தபாற் திணைக்களத்தில், புகையிரத சேவை நிலையங்களில் சேவையில் ஈடுபடுவோர் தமது தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 06 ஆம் திகதிக்கு முன்னர் உரிய மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment