ஊவா மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து கூட்டமைப்பாகபோட்டியிடுவதா இல்லை தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து இன்று இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.
இதற்கான மு.காவின் உயர்மட்டக்குழு கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் பிற்பகல் 4.30மணிக்கு தாருஸலாமில் நடைபெறவுள்ளது.
இது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்திருப்பதாவது,
நாம் அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்தாலும் முஸ்லிம் சமூகத்தின் தேசிய கட்சி என்ற அடிப்படையில் கடந்த தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டிருந்தோம். அதேபோன்று இந்த ஊவா மாகாணசபைத் தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவதாக தீர்மானித்திருந்தோம்.
அவ்வாறான நிலையில் தற்போது சில முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து முஸ்லிம் கூட்டமைப்பாக போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் கட்சியின் உயர் மட்டத்திடம் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆகவே கட்சிப் போரளிகளின் கருத்துக்களை உள்வாங்கிய நாம் அது குறித்து ஆராய்ந்து இன்றைய தினம் நடைபெறவுள்ள உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் இறுதி முடிவொடுக்கவுள்ளோம்.
எவ்வராறாயினும் நாட்டில் தொடர்ச்சியாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்படவேண்டியது அவசியம். அதனடிப்படையில் ஊவாவிலும் மு.கா தனது பேரம்பேசும் சக்தியுடன் பிரதிநிதித்துவங்ளை தக்க வைக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றார்.
0 comments :
Post a Comment