ஆக்கிரமிப்பு இஸ்ரேல்- பலஸ்தீன காஸாவுக்கு இடையில் ஏற்பட்ட 72 மணிநேர யுத்த நிறுத்தம் இன்று வெள்ளிக்கிழமை காலை 8:00 மணிக்கு முடிவுக்குவரவுள்ள நிலையில் யுத்த நிறுத்தத்தை நீடிப்பதில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புகளுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
காஸா மக்களை முற்றுகைக்குள் வைத்திருக்கும் நடவடிக்கையை நிறுத்த இஸ்ரேல் இணக்கம் தெரிவிக்க மறுத்துவரும் நிலையில் நிபந்தனையின்றி யுத்த நிறுத்தத்தையே இஸ்ரேல் ஆதரித்துள்ளது. இதை ஹமாஸ் ஏற்றுகொள்ளவில்லை. அதேவேளை ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என ஆக்கிரமிப்பு அரசு கோருகிறது.
காசாவில் 1,800க்கும் அதிகமானோரை பலிகொண்ட இஸ்ரேலின் தாக்கு தல்கள் தற்காலிக யுத்த நிறுத்த உடன்பாட்டின் மூலம் கடந்த செவ்வாய்க் கிழமை காலை 8 மணிக்கு நிறுத்தப்பட்டன. சுமார் ஒரு மாதகாலம் நீடித்த மோதலில் இஸ்ரேல் தரப்பில் 64 சிப்பாய்கள் உட்பட 67 பேர் கொல்லப்பட்டனர்.என்று ஆக்கிரமிப்பு அரசு கூறுகிறது இந்த நிலையில் மீண்டும் தாக்குதல்கள தொடரலாம் என தெரிவிக்கப் படுகிறது. l.o

0 comments :
Post a Comment