சர்வதிகார ஆட்சியும் குடும்ப ஆதிக்கமும் இந்நாட்டில் தலை தூக்கியுள்ளதால் மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியாது தவிக்கின்றனர். எனவே இந்நிலையை முடிவுக்கு கொண்டு வர ஆட்சி மாற்றம் ஒன்று அவசியமாகும் என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நுவரெலியா விளையாட்டு கழகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் மேலும் கூறுகையில்,
இலங்கை ஒரு ஜனநாயக ஆட்சி நாடாக இருந்த போதிலும் இங்கு நடைபெறும் ஆட்சி சர்வாதிகாரமாகவும் குடும்ப ஆதிக்கமாகவும் இருப்பதால் இந்த நாட்டுமக்கள் பொருளாதார பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலை மாற்றமடைய வேண்டும். இந்நாட்டில் மீண்டும் ஜனநாயக ஆட்சி கொண்டு வரப்பட வேண்டும். இதற்கு இலங்கையில் வாழும் அனைத்து சமூகத்தினரும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதற்கு ஒன்றிணைய வேண்டும் என்றார். -வீ-

0 comments :
Post a Comment