பைஷல் இஸ்மாயில்-
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.இயக்கத்தின் அக்கரைப்பற்று கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட ஒன்று கூடலும் பாராட்டு விழாவும் அக்கரைப்பற்று கிங்ஸ் ஏசியன் சிப் ஹொட்டலில் நாளை (09) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அக்கரைப்பற்று வை.எம்.எம்.ஏ.கிளையின் தலைவர் எம்.சீ.எம்.பழீல் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.இயக்கத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தேசிய தலைவர் எம்.ரி.எம்.தாசிம், தேசிய பொதுச் செயலாளர் எம்.என்.எம்.நபீல், தேசிய பொருளாளர் எம்.எஸ்.எம்.றிஸ்னி உட்பட தேசிய உப செயலாளராக தெரிவு செய்யப்பட்ட எம்.ஐ.உதுமாலெவ்வை, திட்டப்பணிப்பாளர் எஸ்.தஸ்தகிர், அம்பாறை மாவட்ட பணிப்பாளர் கே.எல்.எம்.சுபையிர், மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எம்.எஸ்.உமர்லெவ்வை ஆகியோர் பொண்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
மேலும் வை.எம்.எம்.ஏ.இயக்கத்தின் அங்கத்தவர்களாக இருந்து மரணித்த உறுப்பினர்கள் மற்றும் காசாவில் இஸ்ரேலின் கன்மூடித்தனமான தாக்கதலுக்குள்ளாகி உயிர் நீத்த சகோதர முஸ்லிம் உறவுகளுக்காக விசேட துஆப் பிராத்தனை ஒன்றும் அங்கு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.இயக்கத்தின் தேசிய சபை உறுப்பினர்கள், மாவட்டத் தலைவர்கள் மாவட்ட நிருவாக சபை அங்கத்தவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

0 comments :
Post a Comment