அட்டாளைச்சேனை பாலமுனையில் கலாச்சார சீர்கேடு பள்ளிவாயலின் மறுப்பறிக்கை

முஹா-

ட்டாளைச்சேனை பாலமுனை கடற்கரையில் கலாசார சீர்கேடு பாலமுனை மகு. கண்டனம்’ எனும் தலைப்பில் எமது சின்னப்பாலமுனை ஜூம்ஆப் பள்ளிவாயல் நிருவாக சபை பற்றி தங்களது இம்போட்மிரர் (ஐஆPழுசுவு ஆஐசுசுழுசு) இணையத் தளத்தில் வெளியாகிய செய்தி தொடர்பான மறுப்பறிக்கை.

பாலமுனை கடற்கரையில் நடைபெற்ற பெருநாள் களியாட்ட நிகழ்வுகள் கலாசார சீர்கேடானது என்றும் இதற்கு எமது பள்ளிவாயல் நிருவாக சபை அனுமதியளித்தது விசனத்திற்குரியது என்றும் எமது சபை மீது குற்றம் சுமத்தி பாலமுனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுச் செயலாளர் எம்.ஏ. சதாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக எமது நம்பிக்கையாளர் சபையின் விளக்கம் வருமாறு,

குறித்த களியாட்ட நிகழ்வு நடத்துனரான பிரியந்த விஜயசிங்க என்பவர் எமது சபையைத் தொடர்பு கொண்டு பெருநாள் களியாட்ட நிகழ்வுக்கு அனுமதி கோரியிருந்தார். இதனை எமது சபை ஆராய்ந்தபோது இதற்கு எவ்விதத்திலும் அனுமதி வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டிலிருந்தோம். இதனை அவரிடமும் கூறியிருந்தோம். ஆனாலும், எமது சபை அனுமதி வழங்காவிட்டாலும் பிரதேச சபை அனுமதியுடனும் பொலிஸாரின் ஒத்துழைப்படனும் இந்நிகழ்வு நடைபெறுமென்ற தகவலும் அறியக்கிடைத்தது.

மேலும், இதற்கென சபை கூடியபோது எமது நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. அன்சில் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது “தங்களது சபை அனுமதி வழங்காவிட்டாலும் பதிவு செய்யப்பட்ட ஒரு களியாட்ட நிறுவனம் என்ற வகையில் நாட்டு வழமைப்படி பொலிஸாரின் உதவியுடன் அவர்கள் இந்நிகழ்வை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன “ எனக் கூறினார்.

தவிசாளரது கூற்றினை கருத்திலெடுத்த எமது சபை, நாம் அனுமதி மறுத்தாலும் நாட்டுச் சட்டத்திற்கமைய அனுமதி பெற்று அவர்கள் விருப்பப்படி நடத்தினால் மிக மோசமான கலாசார சீர்கேடுகள் நடக்கக்கூடும் என எமது சபை அஞ்சியதாலும், தவிசாளரின் கருத்தப்படி அவர்கள் இதனை எப்படியும் நடத்துவதற்கான நிலைமை காணப்பட்டதாலும், இந்நிகழ்வுக்கு பிரதேச சபையும் அனுமதி வழங்கவுள்ளதாக அறியக் கிடைத்ததாலும் இந்நிகழ்வினை நிபந்தனைகளுடன் நடத்துவதற்கு அனுமதி வழங்குவதெனத் தீர்மானித்தோம்.

இதற்கமைய இஸ்லாமிய கலாசாரத்திற்கு பாதிப்பில்லாதவாறும், நடனம் மற்றும் ஆடல் பாடல்கள் இல்லாமலும், அண் பெண் கலப்பின்றியும் நடத்துவதற்கு அனுமதி வழங்க தீர்மானித்ததுடன் பிரதேச சபை அனுமதி வழங்கினால் மாத்திரம் அனுமதிக் கடிதம் வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

நிகழ்வை நடத்துபவரான பிரியந்த விஜயசிங்க மீண்டும் வந்து பிரதேச சபையின் அனுமதிக் கடிதம் கிடைத்துள்ளதாகக் கூறி அனுமதிக் கடிதம் கேட்டபோது, பிரதேச சபையின் 2014.07.24 ம் திகதிய கடிதத்தின் பிரதியைப் பெற்று 27.07.2014 ல் மேற்படி நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருந்தோம்.

இவை இவ்வாறிருக்க “எமது நிருவாக சபை அனுமதி வழங்கியுள்ளதால் அதனை மறுக்க முடியாத சூழ்நிலையில் தானும் அனுமதி வழங்கவேண்டிய நிலை வந்தது” என தவிசாளர் எம்.ஏ. அன்சில் கூறியிருப்பது பெரும் கவலையளிக்கிறது.

மேலும், பணத்திற்காகவும் கொமிஷனுக்காகவும் அனுமதி வழங்கி இடமளித்துள்ளதாக வேண்டுமென்றே சகோதரர் எம்.ஏ. சதாத் சந்தேகக் கண்கொண்டு பேசியிருப்பதும்; கட்டுக் கதைகளைக் கூறியிருப்பதும் கண்டிக்கத்தக்கதாகும். எமது நிருவாக சபையினால் இதற்கென எவ்வித நிதிக் கொடுக்கல் வாங்கல் ஒப்பந்தமோ பேச்சுக்களோ மேற்கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

பாலமுனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுச் செயலாளர் எம்.ஏ. சதாத் கண்டன அறிக்கை விடுத்து எமது சபையை அவமதித்து நிந்தித்துள்ளமையை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், பொறுப்பள்ள ஒருவர் என்ற வகையில் எமது சபையைத் தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்பில் தெளிவு பெறாமல் முன் பின் யோசனையற்ற ஒருவர் போல் அறிக்கை விட்டிருப்பது கவலைக்குரியதாகும்.

 உண்மையாகவே ஊரில் அக்கறையுள்ள, ஊரைப்பற்றி சிந்திக்கின்ற ஒருவர் இவ்வாறு செய்ய முடியாது. இவர் யாருடனோ கொண்ட தனிப்பட்ட பிரச்சினையைக் கொண்டு வந்து எமது சபையுடன் கொட்டித் தீர்க்க முனைகிறார் போலும். 

தனிப்பட்ட இந்நபர் ஒரு ஊரின் சபையை அவமதித்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். தடி எடுத்தவரெல்லாம் வேட்டைக்காரனாக முடியாது.

எனவே, எங்களால் முடிந்தவரை பெரியதொரு கலாசார சீரழிவைத் தடுக்கும் நோக்கில் இந்நிகழ்வை நிபந்தனைகளுடன் நடத்த அனுமதித்திருந்தோம். அத்துடன் எங்களது நிபந்தனையின் படியே குறித்த சிங்கள நபர்கள் நிகழ்ச்சிகளை நடத்தினர். 

ஆனால் நமது இஸ்லாமியர்கள் என்று பேச்சளவில் கூறிக்கொள்பவர்கள் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கு அருகிலும் சுற்றப் புறங்களிலும் நடந்து கொண்ட விதங்களும்தான் கலாசார சீரழிவாகத் தெரிந்ததே தவிர நிகழ்ச்சியை நடத்தியவர்கள் எமது நிபந்தனைகளின் படியே நடத்தினார்கள் என்பது கண்கூடு.

மேலும். இந்நிகழ்வு நடைபெறாத காலங்களில் இக்கடற்கரையில் இதைவிடவும் அதிகமானவர்கள் வருகை தந்து ஆண் பெண் வித்தியாசமின்றி நடந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கதுடன், இந்நிழ்வுகள் நடந்ததால்தான் கலாச்சார சீர்கேடுகள் நடைபெறுகின்றன என்பதை ஏற்க முடியாது. 

அத்துடன் இவ்வாறான சந்தர்ப்பங்களில் வாயினால் மாத்திரம் வீரம் பேசுகின்றவர்கள் யாராயினும் நமது பிரதேசங்களில் நடைபெறுகின்ற பல்வேறு கலாசார சீர்கேடுகளைத் தடுக்க ஏதாவது முயற்சிகளை எடுத்துள்ளார்களா? எனக் கேட்கின்றோம். ஆனால் எமது சபை பல்வேறு சீர்கேடுகளை நமது பிரதேசத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது என்பதைக் அனைவரும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

மக்கள் கூடுவதைத் தடுப்பதற்கும் ஒரு நிகழ்வை நடத்த விடாமலிருப்பதற்கும் பள்ளிவாயல் நிருவாகத்திற்கோ பொது அமைப்பகளுக்கோ இந்நாட்டில் சட்டப்படி அனுமதியில்லை என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதுடன், எமது சபையிடம் கட்டாயம் அனுமதி பெற வெண்டுமென்ற தேவையும் இல்லை என்றிருந்தும் இந்நிகழ்வை நாம் கட்டுக்கோப்பாக நடத்த நடவடிக்கை எடுத்திருந்தோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்வது அவசியமாகும்.

நாட்டில் இன்று நிலவுகின்ற இனவாத சூழ்நிலையையும், நிகழ்ச்ச்pயை நடத்துபவர்களின் செல்வாக்கையும் கருத்திற் கொண்டும் மற்றும் மிக மோசமான சீர்கேடுகளிலிருந்து மக்களைத் தடுக்கவும் பல விடயங்களை ஆராய்ந்த பின்னரே இந்நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

ஆனால் நிகழ்ச்சி நடத்துனர்களால் எந்த கலாசார பாதிப்புக்களும் எற்படுத்தப்டவில்லை. நம்மவர்கள்தான் இஸ்லாமிய விழுமியங்களைப் புறந்தள்ளியவர்களாக இங்கு நடமாடித் திரிந்தனர். 

இதற்காகவே, இந்நிழ்வுகளில் பெரும்பாலானவற்றை நடத்த வேண்டாம் என்று உரிய நபரை இரண்டாவது நாளிலேயே எமது சபை கேட்டுக் கொண்டது. அவை நிறுத்தவும்பட்டன . ஆனால், நமது இஸ்லாமியர்களின் நிலை மாறியதா? ஏன்பதை சம்மந்தப்பட்டவர்கள் சிந்தித்து புரிந்து கொள்ளட்டும்.

நம்பிக்கையாளர் சபை
ஜூம்ஆப் பள்ளிவாயல். சின்னப்பாலமுனை
பாலமுனை.

ந்றிக்கை
சம்மந்த பட்ட செய்தியைப்பார்க்க கிளிக்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :