தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர் விடுதிக்கட்டட திறப்புவிழா




முஸ்னீ இப்னு முகம்மது நாபி -

ல்கலைக்கழக மாணவர்களின் வெற்றிகரமான கல்வி நடவடிக்கைகளுக்காக 60 மாணவர் விடுதிகளை நிர்மாணிக்கும் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் 'சறசவி மெதுற' வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாணவர் விடுதிக் கட்டடம் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தலைமையில் மாண்புமிகு உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க அவர்களினால் இன்று (12.08.2014) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜெயந்த நவரட்ண, பல்கலைக்கழக பதிவாளர் ஜனாப் எச். அப்துல் சத்தார், பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் உயர் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அத்தோடு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பொறியியல் பீடத்திற்கான புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லும் நாட்டிவைக்கப்பட்டது. மேலும் பல்கலைக்கழக வளாகத்தில்; நிர்மாணிக்கப்பட்டுள்ள 'பட்டதாரி தொப்பி' தாங்கிய கோபுரமும் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. 

அத்துடன் பல்கலைக்கழகத்தில்; கல்வி கற்றுக்கொண்டிருக்கும் வெளிநாட்டு மாணவர்களை விஷேடமாக அமைச்சரவர்கள் சந்தித்ததோடு அண்மையில் பல்கலைக்கழகங்களுக்கிடையில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் இரண்டாமிடம் பெற்று இப் பல்கலைக்கழத்திற்கு பெருமைசேர்த்த மாணவர்களையும் அமைச்சரவர்கள் பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :