புல்மோட்டை மண்ணின் முதலாவது கலாநிதிக்கு பாராட்டும் கௌரவிப்பு நிகழ்வும்



பஹ்மியூஸூப்-

ஜாமியா நளீமிய்யாவின் முன்னால் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்ஹ் கலாநிதி அப்துல் முத்தலிப் முஹம்மது மிஹ்ழார் (நளீமி) அவர்கள் தமது கலாநிதிப் பட்டத்திற்கான கற்கை நெறியை மலேஸியாவின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில் மத ஓப்பீட்டாய்வுத் துறையில் நிறைவு செய்துள்ளார் இத்துறையில் மலேசியாவின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற முதலாமவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அவரது பிறந்த சொந்த இடமான புல்மோட்டையில் 07.08.2014 சனிக்கிழமை புல்மோட்டை கல்வி அபிவிருத்திக் குழுவின் நுனுஊ ஏற்பாட்டில் அரபாத் நகர் பாடசாலை கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. மண்டபம் வரை புல்மோட்டையின் பாரம்பரிய கலை நிகழ்வான கோலாட்டத்துடன் பெருந்திரளானோர் புடைசூழ ஊர்வலமாக அழைத்துவரப்பட்டதுடன் காலை மௌலவி எம். சலாஹூத்தீன் அவர்களின் கிறாஅத்துடன் ஆரம்பிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து நுனுஊ அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எஸ். அனாப் (நிர்வாக உத்தியோகத்தர் – இலங்கை கனிய மணல் லிமிடெட்) அவர்களின் தலைமை உரையும் அமைப்பின் உறுப்பினர் எம்.எம். றியாழ் அவர்களின் நுனுஊ அறிமுக உரையும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் தற்பொழுது தமது கலாநிதிப் பட்டப் படிப்புக்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும் புல்மோட்டை மண்ணைச் சேர்ந்த அல் ஹாபிழ் எம்.ஏ.அப்துல்லாஹ், மௌலவி எல்.ரீ.முஹ்சீன் சிறப்பு பேச்சாளர்கள் கலந்து கொண்டமை இந்நிகழ்வின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அடுத்து விழாவின் கதா நாயகனான அஷ்ஷெய்ஹ் கலாநிதி அப்துல் முத்தலிப் முஹம்மது மிஹ்ழார் (நளீமி) அவர்கள் நுனுஊ அமைப்பின் உப தலைவர் எம்.எஸ்.யூசுப் லெப்பை (இலங்கை கனிய மணல் லிமிடெட்) அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கபபட்டதோடு, அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எஸ். அனாப் அவர்களால் நினைவுச்சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

தொடர்ந்து கலாநிதி அவர்களின் கல்வி வாழ்க்கையில் அவர்கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன் பெற்றார், உறவினர்கள் கல்வி வாழ்க்கைக்கு உதவிய வழிகாட்டிய அனைவரையும் விளித்து நன்றியுடன் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட நிகழ்வு பெறும் பயனுள்ளதாகவும் அமைந்திருந்தது. கலாநிதியின் தந்தை ஊரின் முதலாவது ஆசிரியர் இவர் ஊரின் முதலாவது கலாநிதி என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

கலாநிதி அவர்கள் ஜாமியா நளீமிய்யாவில் தனது இஸ்லாமிய கற்கையையும் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் கலைமானி (டீ.யு) பட்டத்தினையும் பாகிஸ்தான் இஸ்லாமாபாத் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் முதுமானி (ஆ.யு) பட்டத்தினையும் மலேசிய கேலாலம்பூர் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில் ' மதங்களுக்கிடையிலான ஒப்பீட்டு நோக்கு ' எனும் தலைப்பில் தனது ஆய்வினை மேற்கொண்டு (Ph.னு) கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றதுடன் தற்போது ஐளடயஅiஉ ளுஉநைnஉந ருniஎநசளவைல ழக ஆயடயலளயை வில் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றுகிறார்.

இந்நிகழ்வுக்கு அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :