எனது அணி மும்பை இந்தியன்ஸ், அதற்காகவே விளையாடுவேன்-மலிங்க


இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க மும்பை அணிக்காக விளையாடப்போவதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார். மலிங்க குறித்த நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான காலக்கேடு விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, சௌதேன் எக்ஸ்பிரஸ் அணியின் முகாமையாளர் மூலம் இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லே டி சில்வாவிடம் இதனைத் தெரிவித்துள்ளார். 

சுப்பர் 4 இருபதுக்கு -20 போட்டியில் உள்ளூர் அணியான சௌதேன் எக்ஸ்பிரஸ் வெற்றிபெற்றது. இவ்வணிக்காக லசித் மலிங்க தலைமை வகித்தார். இந்நிலையில் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் சௌதேன் எக்ஸ்பிரஸ் அணி மும்பை அணியை சந்திக்கவுள்ள நிலையிலேயே மலிங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவதற்கான முடிவை எடுத்துள்ளார். 

லசித்த மலிங்க மும்பை அணிக்காக விளையாட முடிவெடுத்தமைக்கான காரணம் அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :