ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக களமிறங்கும் அமெரிக்கா



டக்கு ஈராக்கில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களிடமிருந்து பொது மக்களை பாதுகாக்க இராணுவ உதவி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. கிளர்ச்சியாளர்களை அடக்க ஈராக் விரும்பினால் அமெரிக்கா இராணுவ உதவி அளிக்க தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய தேவைகளுக்காக போராடும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கவும் அமெரிக்கா தயாராக உள்ளது. ஈராக் விரும்பினால் கிளர்ச்சியாளர்கள் மீது விமான தாக்குதல் நடத்தப்படும் என்றும் இனப்படுகொலை நடைபெற சாத்தியம் உள்ளதால் அதை தடுக்க நாங்கள் கவனமுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிளர்ச்சியாளர்களின் முற்றுகையில் ஈராக்கின் வடக்கு மலைப்பகுதியில் சிக்கி தவிக்கும் பொதுமக்களை காப்பாற்ற ஈராக் படைகளுக்கு உதவி வழங்கப்படும் என ஒபாமா கூறியுள்ளார்.

இது தொடர்பான தகவலை வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :