ஓட்டமாவடி மீராவோடை கிராமத்தில் குரங்குகளின் தொல்லையால் மக்கள் விசனம்

த.நவோஜ்-

ட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை கிராமத்தில் குரங்குகளின் தொல்லையால் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மீறாவோடை ஆற்றுப் பகுதியில் இருந்து முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகும் குரங்குகள் வீட்டின் ஜன்னல் கண்ணாடி, வாகன கண்ணாடி, தொலைக்காட்சி பெட்டி போன்ற பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன.

இது தொடர்பாக இப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில்! திடீர் என்று ஆற்றுப் பகுதியில் இருந்து வரும் குரங்குகள் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்துவதாகவும், இதனால் சிறுவர்கள் பயப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குரங்களின் தொல்லைகளில் இருந்து பாதுகாப்புப் பெற்றுத் தருமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :