ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தில் இருந்து விலகுவார் என இந்திய புலனாய்வுப் பிரிவினர் அந்நாட்டு பிரதமர் நரேந்திர மேடிக்கு கடந்த வாரம் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஹக்கீம் இருந்த போதிலும், பலம் மிக்க வெளிநாடுகளின் அனுசரணையில் அந்த கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் ஊடாக இந்த வெளியேற்றம் நிகழும் என கூறப்படுகிறது.
முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்தால், அந்த கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்று பேர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment