இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையிலான யுத்த நிறுத்தம் மேலும் ஐந்து நாட்களுக்கு நீடிக்கப்பட்டதை தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து, இஸ்ரேல் விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
காஸாவில் இருந்து ஐந்து ரொக்கெட்டுகள் வீசப்பட்டதை தொடர்ந்து, பயங்கரவாதிகளின் பகுதிகளை இலக்குவைத்து பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னர் அமுல்படுத்தப்பட்டிருந்த மூன்றுநாள் யுத்த நிறுத்தம் முடிவடைவதற்கு சில நிமிடங்களின் முன்னர் ஐந்து நாள் யுத்த நிறுத்த நீடிப்பிற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.
இந்த பிந்திய தாக்குதல்களை பாரிய யுத்த நிறுத்த மீறலாக இரு தரப்பும் எடுத்துக்கொள்ளுமா என்பது இதுவரை தெரியவரவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
.jpg)
0 comments :
Post a Comment