கிழக்கு மாகாணத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு ரூபா 09 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்
கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக நிலவி வரும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு ரூபா 09 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் கூட்டத்தில் மாகாண முதலைமைச்சர் நஜிப் அப்துல் மஜீட் தலைமையில்; கடந்த 08ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது போது தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் அண்மைக் காலமாக நிலவி வரும் கடும் வரட்சியின் காரணமாக மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள் எனவும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டுள்ள கிழக்கு மாகாண சபையால் இதுவரையும் எந்த விதமான நிவாரணங்களும் வழங்கப்படாமலுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு விசேட நிதியினை ஒதுக்க வேண்டும் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமல வீர திஸ நாயக்கவினால்; சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை மத்திய அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்திற்கு 75 மில்லியன் ரூபாவும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 30 மில்லியன் ரூபாவும், திருகோணமலை மாவட்டத்திற்கு 52.5 மில்லியன் ரூபாவும் குடி நீர் வழங்குவதற்கு ஒதுக்கியுள்ளது.
இந்த நிலையில் கிழக்கு மாகாண சபை சார்பில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிதி ஒதுக்கப்பட வேண்டுமெனவும் முதல் கட்டமாக நீர் வழங்குவதற்காக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கு தலா 3 மில்லியன் ரூபா வீதம் 9 மில்லியன் வழங்குவதாகவும் மூன்று மாவட்டங்களில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர்கள் ஊடாக அடையாளம் காண்பதாகவும் தீர்மானிக்கப்பட்டதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை கூறினார்.

0 comments :
Post a Comment