அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனை நகரில் தொழில் புரியும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களிடேயே நிலவி வருகின்ற முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கான அவசரக் கலந்துரையாடல் ஒன்று, கல்முனை மாநகர முதல்வர்- சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இன்று இடம்பெற்றது.
கல்முனை மாநகர சபையில் அமைந்துள்ள முதல்வர் செயலகத்தில் இன்று புதன்கிழமை மதியம் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை நகரில் இயங்கி வருகின்ற முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கங்கள் சிலவற்றின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்முனை நகரில் சில ஆட்டோ தரிப்பு நிலையங்களில் சிலருக்கு தொழில் உரிமை மறுக்கப்படுவது தொடர்பில் ஆராயப்பட்டது.
இப்பிரச்சினையை சுமூகமாக தீர்க்கும் பொருட்டு பொதுவான தீர்வுத் திட்டம் ஒன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துவது குறித்து மாநகர முதல்வர் இதன்போது வலியுறுத்தினார்.
இது தொடர்பில் விரைவில் அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடாத்தி முடிவுகளை மேற்கொள்வது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் கல்முனை மாநகர சபை சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர எம்.ஐ.ஏ.மஜீத், பதில் சட்ட அதிகாரி எம்.பி.எம்.பௌசான் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment