பதுளையில் 50 மில்லியன் ரூபா செலவில் பல்தேவைக்கட்டிடத்திற்க்கான அடிக்கல் நடும் விழா- படங்கள்

ஜே.எம். வஸீர்-

ள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கீழ் ,யங்கும் புறநெகும வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் பின்தங்கிய நிலையில் காணப்படும் 108 உள்ளுராட்சி சபைகள் தெரிவுசெய்யப்பட்டு அச்சபைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு அபிவிருத்தி வசதிகளை மேம்படுத்தி அதனூடாக அப் பிரதேசங்களை சிறிய அழகிய நகரங்களாக வடிவமைக்கும் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது. 

அதில் ஓர் அங்கமாக அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா அவர்களின் அழைப்பின் பேரில் பதுளை பிரதேச சபைக்காக 50 மில்லியன் ரூபா செலவில் நிருமானிக்கப்படவுள்ள பல்தேவைக்கட்டிடத்திர்க்கான அடிக்கல் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் நடப்பட்டது.

பல்தேவைக்கட்டிட வேலைத்திட்டம் 2015 மே மாதம் நிறைவு பெறவுள்ளது. ,ந்நிகழ்வல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா,மக்களுக்காக மக்களின் காலடியில் நெருங்கி சேவையாற்றக்கூடிய ஒரே நிறுவனம் என்றால் அது உள்ளுராட்சி நிறுவனமாகும். அதற்கமையவே நமது ஜனாதிபதி அவர்கள் நாட்டிலுள்ள உள்ளுராட்சி சபைகளை அபிவிருத்தி செய்ய வழிகாட்டுகின்றார். 

அதன் பிரகாரம் எனது அமைச்சு நாட்டிலுள்ள அனைத்து உள்ளுராட்சி சபைகளினதும் தேவைகளை ,னங்கண்டு அவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது ,ன்று உள்ளூராட்சித் துறையில் பலதரப்பட்ட அபிவிருத்திகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் நோக்கம் உள்ளூராட்சி சபைகள் ஊடாக மக்கள் சிறந்த சேவையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதேயாகும். எனவே சகல உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் உள்ளுராட்சி சபைகளை பலப்படுத்த முன்வருமாறு அமைச்சர் தனதுரையில் வேண்டிக் கொண்டார்.

,ந்நிகழ்வில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ. அப்துல் மஜீத், பதுளை பிரதேச சபை தவிசாளர் சாந்த ராஜபக்ஷ . புறநெகும செயற்த்திடடத்தின்பணப்பாளர் ஆனந்த கமகே மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் பிரமுகர்களும் பொதுமக்களும் ,ந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :