நரேந்திர மோடி மற்றும்ஜெயலலிதா குறித்து வெளியான கட்டுரை தொடர்பில் ஜனாதிபதி அறிக்கை கோரியுள்ளார்

ந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் ஆகியோருக்கு களங்கத்தினை ஏற்படுத்தக் கூடிய வகையில், பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் வெளியான கட்டுரை தொடர்பில் அறிக்கையொன்றைக் கோரியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கை தமக்கு கிடைத்த பின்னர் இந்த விவகாரம் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், குறிப்பிட்ட கட்டுரை வெளியானமை தொடர்பில் தமது கவலையைத் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் வெளியான கட்டுரையை அடுத்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இலங்கைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுதர்ஷன் செனவிரத்னவை அழைத்து விடயங்களை ஆராய்ந்துள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய ஊடகங்கள் இந்த விடயம் குறித்து அதிகக் கவனம் செலுத்தியுள்ள அதேவேளை,எட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி சேவையில் நேற்றைய தினம் ஒளிபரப்பான நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட பாரதீய ஜனதாக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி விடயங்களை தெளிவுடுத்தினார்.
nf 


அவர் தெரிவித்ததாவது;

இலங்கை அரசாங்கத்தின் உயர்பீடம் இந்த விடயத்திற்கு தமது கவலையைத் தெரிவித்துள்ளது. அவர்கள் இதற்கு மன்னிப்புக் கோரியுள்ளனர். இலங்கைக்கும் எமக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் காணப்படுகின்றன. இந்தியாவின் தேசிய ஒற்றுமையை, தேவைக்கேற்றவாறு நடாத்த முடியாது. எமக்கென்று வெளிநாட்டு கொள்கைகள் காணப்படுகின்றன. நாங்கள் இலங்கைக்கு எதிர்ப்பைத் தெரிவிப்போமானால், பாகிஸ்தான் அல்லது சீனா இலங்கைக்குள் தமது இருப்பை உறுதி செய்துகொள்வதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :