எம்.ஜே.எம். முஜாஹித்-
அம்பாறை மாவட்ட மீனவர்களுக்கு எரிபொருள் மானியத்துக்கு பதிலாக மாற்று மானியம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கடற்றொழில் பணிப்பாளர் கே. செல்வராசா தெரிவித்தார்.
மீனவர்களின் கோரிக்கைக்கேற்ப பதில் மாற்று மானியமாக மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாக உதவிப்பணிப்பளர் மேலும் தெரிவித்தார்.பதிவு செய்யப்படாத இயந்திரப்படகுகள், வள்ளங்கள் மற்றும் தோணிகள் என்பவற்றுக்கு மாற்று மானியம் வழங்ப்படமாட்டாது எனவும் அவர் கூறினார்.
மஹிந்த சிந்தனை திட்டத்திற்கமைய கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தினால் கடற்றொழிலாளர்களுக்கு 2012ம் ஆண்டு தொடக்கம் 2013ம் ஆண்டு வரை எரிபெருள் மானியமாக ஒரு லீற்றர் டீசலுக்கு 12 ரூபாவும், ஒரு லீற்றர் மண்ணென்னைக்கு 25 ரூபாவும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
0 comments :
Post a Comment