அஷ்ரப் ஏ சமத்-
இந்த நாட்டில் நடைபெற்ற கடந்த 30 வருடகால யுத்தத்தில் நாம் எவ்வாறு வாழ்ந்தோம். நாம் அன்றாடம் பீதியினாலும் அமைதியின்மை, மரண ஓலங்கள், குண்டுவெடிப்புக்கள் போன்ற பல்வேறு துண்பங்களுக்கெல்லாம் முகம்கொடுத்து வாழ்ந்து வந்தோம்.
நம்மில் ஒருவர் காலையில் எழுந்து தனது அலுவல்களுக்கு வெளியே போகி அவர் மீண்டும் வீடு வரும் வரை நமது குடும்பத்தினர் எவ்வாறு அங்கலாய்ப்பட்டு அல்லல்பட்டு இருந்தனர். அந்த காலப்பகுதியில் நாம் நாளாந்தம் ஒவ்வொரு நிமிடத்திலும் அச்சத்தினாலும் மன உழசைசாலாலும் சந்தேகத்துடனும் நாம் வாழ்ந்து வந்தோம். அந்த யுத்தம் ஒர் இனத்துக்கோ, மதத்திற்கோ, மொழி சிறுபாண்மை பெருபான்மை என்று இல்லாமல் இந்த நாட்டில் வாழும் அனைவரையும் அழித்தது.
இந்த நாட்டில் மீண்டும் மொரு சமாதானமானக் காற்று வீசுமா? என ஏங்கி நின்றோம். அன்று இந்த நாட்டில் வாழ்ந்த அணைவரும் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டது அபிவிருத்தியை அல்ல அவர்கள் கேட்டதெல்லாம் இந்த கொடிய யுத்தத்தை ஒரு முடிபுக்கு கொண்டுவந்து எங்களை இந்த நாட்டில் சமாதானமாகவும் சந்தோசமாகவும் தற்போது உள்ள நிலைமைக்கு கொண்டுவாருங்கள் என ஜனாதிபதியைக் கேட்டிருந்தார்கள். அதனைத்தான் அவர் நிறைவேற்றியிருந்தார். என ஜனாதிபதியின் செயலாளர் உரையாற்றினார்.
முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மத், சப்ரகமுவ பல்கழைக்கழக வேந்தர் பேராசிரியர் கும்புருகமுவே வஜிர நாயக்க தேரோ ஆகியோரது இணைத்தலைமையில் நேற்று (4)ஆம் திகதி கொழும்பில் உள்ள பி.எம்.ஜ.சி.எச்.இல் “ஒரே நாடு ஒரே மக்கள்” என்ற மும்மொழியிலான முஸ்லீம் பௌத்த இன ஜக்கியம் சம்பந்தமான கை நூல் வெளியீட்டு வைபவம் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதான பேச்சாளராக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா,ஆகியோhகள் பிரதான உரைகளை நிகழ்த்தினார்கள்.அமைச்சர் வாசுதேவ நானயக்கார, சிரேஸ்ட ஊடகவியலாளர் எட்வின் ஆரியதாச, யப்பான் - வணகல உபதிஸ்ச தேரோ, எம்.எம்.ஏ தஹ்லான் மொளலவி ஹஸ்புல்லாஹ் ஆகியோறும் உரையாற்றினார்கள்.
ஜனாதிபதியின் செயலாளர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் -
இன்று யுத்தம் முடிவடைந்துள்ளது தற்பொழுது இந்த அழகிய நாட்டின் சமாதானக் காற்றை நாம் அனுபவிக்கின்றோம். தற்பொழுது இந்த நாட்டில் சகலரும் எவ்வித பயமுமின்றி நாட்டில் நாலா பாகத்திற்கும் சென்று சந்தோசமாகவும் இந்த அழகிய இயற்கை வழங்களையும் அபிவிருத்திகளையும் அனுபவிக்கின்றோம். யுத்தம் நடைபெற முன் நாம் இருந்த நிலையினை இந்த 5 வருடத்திற்கு பின் சிலர் மறந்துவிட்டார்கள். மறந்து பேசுகின்றார்கள்.
உலகில் உள்ள பல்வேறு நாடுகள் இந்த நாட்டை இரண்டாகப் பிரிக்கவே நினைத்த நாடுகள் எல்லாம் எவ்வாறுதான் அழுத்தத்தைக் ஜனாதிபதிக்கு கொடுத்தாலும் அதையெல்லாம் முகம் கொடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் இந்த யுத்தத்தை ஒரு முடிபுக்கு கொண்டுவந்தார்கள். இந்த நிலைமை இந்த தலைமைத்துவத்தினாலேய இந்த சுதந்திரம் கிடைத்தது.
ஆகவே தான் இந்த யுத்தத்தை முடிபுக்கு கொண்டுவந்த பின் ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டில் இரு இனங்கள் மட்டுமே உள்ளன. இந்த நாட்டில் வாழும் சமுகத்தினர்களுள் இந் நாட்டுக்கு விசுவாசமானவர்கள். விசுவசமற்றவர்கள். என சொல்லியிருந்தார். நாம் எல்லோரும் இலங்கையர்கள். அவர் ஒருபோதும் ஒர் இனத்துக்கோ மற்றைய மதத்தின் உள்ள மக்களுக்கு எதிராகவோ இந்த யுத்தத்தினை திணித்து முடிபுக்கு கொண்டுவரவில்லை. இந்த நாட்டில் வாழும் சகல சமுகங்களும் சந்தோசமாகவும் சமாதாணமாகவும் அச்சமின்றி வாழக்கூடியதொரு நிலைமையைத்தான் உருவாக்கினார்கள்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் நான் இந் நிகழ்வுக்கு போவதாக அறிவித்திருந்தேன். அதனை சந்தோசமாக ஏற்றுக்கொண்டார்கள.; இன்றைய சூழ்நிலையில் இவ்வாறானதொரு நிகழ்வையும் இங்கிருந்து சகல கிராமத்திலும் நகரத்திலும் உள்ள மக்களுக்கு இன ஜக்கியத்தை கொண்டு செல்லல் வேண்டும். குறிப்பாக 44 இலட்சம் மாணவ சமுகங்கள் எமது நாட்டில் உள்ளனர். இவர்களுக்கு இனங்களுக்கிடையில் ஜக்கியமாகவும் ஏனைய மதங்களுக்கும் அவர்களது கருத்துக்கள், உணர்வுகள், கலர்ச்சாரத்துக்கு நாம் மதிப்பளிக்கும் விடயத்தில் இம் மாணவ சமுகத்திடம் திணிக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் நாம் பிரிவின்பால் விட்டுச் செல்லப்பட்டுவிடுவோம்.
இந்த நாட்டினை சரியான பாதைக்கு பல்லிண சமுகம் வாழும் நாட்டில் மாணவர் சமுகத்திணிடையே இன ஜக்கியத்தையம் கட்டாயம் வழக்க வேண்டும. அண்மையில் ஒரு மாணவன் தனது தந்தை 30 வருடகாலமாக சிக்ரட் புகைப்பதில் இருந்து நோய்வாய்ப்பட்டார். அவர் ஒரு நாளைக்கு 4 பக்கட்; சிக்ரட் புகைக்கக் கூடியவர். ஆனால் அவரது மகன் தனது தந்தையிடம் போய் “தந்தையே எனக்கு நல்லதொரு தந்தை வேண்டும.; உங்களை நான் இழக்க விரும்பவில்லை. உடனடியாக நீங்கள் சிக்ரட் புகைக்கும் பழக்கத்தை கைவிடுங்கள். என்று அழுத்தமாகச் சொன்னான். அந்த தகப்பன் உடனடியாக தனது தனயனின் சொல் கேட்டு அந்தப் பழக்கத்தை உடன் நிறுத்திவிட்டார். இன்றும் அவர் சுகபோகியாக தனது தனயனுக்கு நல்லதொரு தந்தையாக வாழ்ந்து வருகின்றார். ஆகவேதான் மாணவர்களால் எதனையும் நிறுத்த முடியும்.
நல்லதொரு கருத்தை இந்த நாட்டில் முன்கொண்டு செல்ல முடியும். எனது பாடசாலைப்பருவத்தில் என்னுடன் தமிழ,; முஸ்லீம் கிரிஸ்த்துவ பாடசாலை
நண்பர்கள் இருந்துவந்தனர். அவர்களுடன் மிக நெருக்கமாகவும் அவர்களது கலை கலாச்சாரத்துக்கு மதிப்பளித்து வாழ்ந்து வந்தேன். ஆனால் அன்று எனக்கு தமிழ் பாடத்தை கற்கக் கூடியதாக பாடசாலைக்கல்வி அமைந்திருக்கவில்லை. அந்த வசதி இருந்திருந்தால் இன்று நான் இந் நிகழ்வில் தங்களோடு தமிழ் மொழியிலும் பேசக் கூடியதாக இருந்திருக்கும் உங்கள கருத்துக்களை அறிந்திருக்க முடியும்..
இந்த நாட்டில் வாழும் பல்லிண சமுகங்களது மொழிப்பிரச்சினைக்கு ஜனாதிபதி அவர்கள் 2020ஆம் ஆண்டு ஆகும்போது இந்த நாட்டில் உள்ள சகல மாணவ சமுகமும் 3 மொழிகளிலும் பேசக் கூடியதும் வாசிக்க கூடியவர்களாக வருவதற்கு தற்போதைய கல்வித் திட்டத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். நவீன யுகத்தில் போட்டி போடக்கூடிய வகையில் 2220 ஆங்கில
மொழியும் இலங்கை மாணவர்கள் சர்வதேச தொழில்நுட்பத்தில் போட்டிபோடக்கூடிய வகையில் சாந்தர்ப்பங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் மேலும் ஓர் அங்கமாக சகல சமுகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் மொழி பற்றிய அமைச்சினை ஏற்படுத்தி வழங்கப்பட்டுள்ளது. அவர் மொழி அபிவிருத்தி பற்றி பல செயற்பாடுகளை இந்த நாட்டில் சகல இனங்களுக்கும் சேவை செய்துவருகின்றார். வெளிநாட்டவரிடமிருந்து நமது நாட்டை மீட்டு சுதந்திரம் பெற்றுத் தந்தவர்கள் ஒரு இனத்தவர்களைச் சார்ந்தவர்கள் அல்லர்.
சகல சமுகத்திலிருந்தும் சுதந்திர வீரர்கள் இணைந்துதான் இந்த நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார்கள். நாம் பெருன்பாண்மை சிறுபாண்மை என்ற வித்தியாசம் ;இந்த நாட்டில் இருக்கக் கூடாது. சகலருக்கும் இந்த நாடு சொந்தம் ஒரு நாடு, ஒரே மக்கள் என்ற தொணிப்பொருளில்தான் நாம் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அங்கு உரையாற்றினார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment