பொதுபல சேனாவுக்கு எதிராக அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர் ஒன்று சேர்ந்து புதிய அமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயாராகி வருவதாக சிங்கள இணையம் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுபல சேனாவின் செயலாளரான கலகொடஅத்தே ஞானசாகர தேரர் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீது முன்வைத்த குற்றசாட்டுகளின் விளைவாகவே இவ்வாறானதொரு புதிய அமைப்பை அவர்கள் உருவாக்கவுள்ளனர்.
அரசாங்கத்தை தர்மசங்கட நிலைமைக்கு தள்ளிவிடும் வகையில் அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் பின்னணியிலுள்ள சதி முயற்சிகளை முறியடிக்கும் வகையில் தனித்தனியாகச் செயற்படாமல் கூட்டாகச் செயற்பட்டு பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்காகவே அதிக எண்ணிக்கையிலான அமைச்சர்கள் ஒன்றிணைந்து பொதுபல சேனாவுக்கு எதிராக புதிதாக அமைப்பு ஒன்றினை உருவாக்கத் தயாராகி உள்ளனர் என்றும் அந்த சிங்கள இணையம் தெரிவித்துள்ளது.
தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சிங்களத்தில் லங்கா சீ நியுஸ்
.jpg)
0 comments :
Post a Comment