வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் மீறாவோடை லங்கா ஸ்டோர் வீதியில் இன்று சனிக்கிழமை கைக்குண்டு மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மீறாவோடை லங்கா ஸ்டோர் வீதியில் ஆதம்பாவா நஜீம் என்பவரின் வீட்டில் அவரது மனைவி சனிக்கிழமை காலை 7 மணியளவில் முற்றத்தை துப்பரவு செய்து கொண்டிருக்கும் போது ஒரு பொருள் தெரிவதாக அவதானித்து அதனை எடுத்து பார்த்த போது பிளாஸ்டிக் டின்னில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று தெரிவதை அவதானித்ததும் இது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருவதாக தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment